search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐசிசி டெஸ்ட் தரவரிசை"

    • வங்கதேசத்திற்கு எதிராக 4 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 64 ரன்கள் மட்டுமே பாபர் அசாம் சேர்த்துள்ளார்.
    • ஐசிசி தரவரிசையில் 12-வது இடத்திற்கு பாபர் அசாம் தள்ளப்பட்டார்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் வங்கதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் 2-வது டெஸ்ட்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

    இந்த தொடரில் மோசமாக விளையாடிய பாபர் அசாம், 4 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 64 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் கடந்த 5 வருடத்தில் முதல் முறையாக டாப் 10-ல் இருந்து பாபர் அசாம் வெளியேறி 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அவர் டெஸ்ட்டில் 50-க்கு மேற்பட்ட ரன்களை கடைசியாக 2022-ம் ஆண்டுக்கு பிறகு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்தின் ஜோ ரூட் 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    • ரோகித் சர்மா 2 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 11-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் முன்னேற்றம் கண்டிருந்தாலும், ஆஸ்திரேலிய அணி பேட்டர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். அதன்படி ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷாக்னே ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

    இங்கிலாந்தின் ஜோ ரூட் 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் 2-ம் இடத்தில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் ஒரு இடம் பின் தங்கி 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேசமயம் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். டாப் 10 2 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 10-ம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். விராட் கோலி 1 இடம் முன்னேறி 8-வது இடத்தையும் ரோகித் 2 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளனர்.

    டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தொடர்ந்து முதல் இரு இடங்களை தக்கவைத்துள்ளனர். நியூசிலாந்து தொடரில் சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹசில்வுட் 4-ம் இடத்திற்கும், நாதன் லையன் 6-ம் இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். அதேசமயம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 5-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    மேலும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி வீரர் கிளென் பிலிப்ஸ் அரைசதம் கடந்ததுடன், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலல் டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் 12 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    இப்பட்டியலின் முதல் இரண்டு இடங்களில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் உள்ளனர்.

    • ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தில் உள்ளார்.
    • ரோகித் ஒரு இடம் பின் தங்கி 13-வது இடத்தில் இருக்கிறார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய இளம் வீரர்களான கில், ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரெல் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் ஏற்றம் கண்டுள்ளனர்.

    இந்திய இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்திலும் கில் 4 இடங்கள் முன்னேறி 31-வது இடத்திலும் ஜூரெல் 31 இடங்கள் முன்னேறி 69-வது இடத்திலும் உள்ளனர். ரோகித் ஒரு இடம் பின் தங்கி 13-வது இடத்தில் இருக்கிறார்.

    முதலிடத்தில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் தொடருகிறார். ரூட் 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 2 இடங்கள் பின் தங்கி 9-வது இடத்தில் இருக்கிறார். இந்திய அணி வீரர்கள் பொறுத்தவரை கோலி மட்டுமே டாப் 10 இடத்திற்குள் உள்ளார்.

    டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதலிடத்தில் தொடருகிறார். மற்றொரு இந்திய வீரரான அஸ்வின் 2-வது இடத்தில் உள்ளார். குல்தீப் யாதவ் 10 இடங்கள் முன்னேறி 32-வது இடத்தை பிடித்துள்ளார்.

    டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும் உள்ளனர். இதில் ஜோ ரூட் 3 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தில் உள்ளார். மற்ற தரவரிசைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.

    • விராட் கோலி 7-வது இடத்தில் தொடர்கிறார்.
    • இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஒரு இடம் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார்.

    டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 14 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஒரு இடம் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டக்கெட் 12 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 7-வது இடத்தில் தொடர்கிறார்.

    இந்த தரவரிசையில் வில்லியம்சன் முதல் இடத்தில் (818) யாரும் நெருங்க முடியாத இடத்தில் உள்ளார். 2 முதல் 10 இடங்கள் முறையே டேரி மிட்செல், பாபர் அசாம், ஜோ ரூட், கவாஜா, விராட் கோலி, கருரத்ணே, ஹரி புரூக், மார்னஸ் லாபுசாக்னே ஆகியோர் உள்ளனர்.

    • பந்து வீச்சாளர்களில் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • பேட்ஸ்மேன்களில் மாரன்ஸ் லபுசேன் 903 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    ஐசிசி இன்று வெளியிட்டுள்ள சிறந்த பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் 884 புள்ளிகளுடன் ஹெட் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது . இந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்சில் சதம் (163) அடித்தும், 2வது இன்னிங்சில் 18 ரன்களும் எடுத்தார். முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடிய அவர் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் அடித்த ஸ்மித் 885 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தில் நீடிக்கிறார் ஆஸ்திரேலிய வீரர் மாரன்ஸ் லபுசேன் 903 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

    மேலும் 39 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே அணியைச் சேர்ந்த மூன்று பேட்ஸ்மேன்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். ஒரே அணியை சேர்த்த வீரர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பது அரிதான நிகழ்வு. டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இது கடைசியாக 1984-ல் நிகழ்ந்தது. மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் கோர்டன் கிரீனிட்ஜ் (810 ரேட்டிங் புள்ளிகள்), கிளைவ் லாயிட் (787) மற்றும் லாரி கோம்ஸ் (773) ஆகியோர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தனர்.

    இந்தியா சார்பில் ரிஷப் பண்ட் 10-வது இடத்தில் உள்ளார். ரகானே முதல் இன்னிங்சில் 89 மற்றும் 2-வது இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்ததன் மூலம் அவர் 37-வது இடத்திற்குத் திரும்பினார். ஷர்துல் தாக்கூர் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்ததன் மூலம் 6 இடங்கள் முன்னேறி 94-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    பந்து வீச்சாளர்களில் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

    • டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • நியூசிலாந்து அணி வீரரான போல்ட் 4 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார்.

    டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங், பந்து வீச்சு தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டது. டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோரூட் 897 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்து முதல் இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணி வீரர் மார்னஸ் லாபஸ்சேன் 892 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு பின் தங்கினார்.

    டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான் அணியில் அப்ரிடி ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்திலும் தென் ஆப்பிரிக்கா வீரர் ரபாடா ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    நியூசிலாந்து வீரர் ஜேமிசன் 3 இடம் பின் தங்கி 6-வது இடத்தில் உள்ளார். அந்த அணியின் மற்றொரு வீரரான டிரெண்ட் போல்ட் 4 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார்.

    முதல் இடத்தில் ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ் முதல் இடத்திலும் இந்திய அணி வீரர் அஸ்வின் இரண்டாவது இடத்திலும் தொடர்கிறார்கள்.

    இங்கிலாந்து அணி வீரர் ஜோரூட் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

    • ரபாடா 836 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
    • முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான கம்மின்ஸ் தொடர்கிறார்.

    டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இந்த தரவரிசையில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 2 இடங்கள் முன்னேறி உள்ளார். இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 5 விக்கெட்டுகளையும் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரபாடா இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா-அப்ரிடி ஆகியோரை பின்னுக்கு தள்ளி தரவரிசையில் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ரபாடா 836 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் அப்ரிடி-பும்ரா 828 புள்ளிகளுடன் 4,5-வது இடங்களிலும் உள்ளனர். முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான கம்மின்ஸ் தொடர்கிறார்.

    • இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்பத்திய இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் 11 இடங்கள் முன்னேறியுள்ளார்.

    டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி 6 ஆண்டுகளுக்கு பிறகு டாப் 10 இடத்தை இழந்துள்ளார். மோசமான பேட்டிங் காரணமாக அவர் 13-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சதம், இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் அடித்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 5 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா 9-வது இடத்தில் நீடிக்கிறார். ஜடேஜா 8 இடங்கள் முன்னேறி 34-வது இடத்தை பிடித்துள்ளார்.

    நியூசிலாந்து தொடர் மற்றும் இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்பத்திய இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் 11 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதல் இடத்திலும் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசேன் 2-வது இடத்திலும் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 3-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 4-வது இடத்திலும் தொடர்கின்றனர்.

    அதேபோல் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஆண்டர்சன் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தில் உள்ளார். பேட் கம்மின்ஸ் முதல் இடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும் பும்ரா 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த ஜடேஜா முதல் இடம் பிடித்துள்ளார்.

    இலங்கையிடம் 0-2 என தென்ஆப்பிரிக்கா படுதோல்வியடைந்ததால் நியூசிலாந்து முதன்முறையாக தரவரிசையில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. #ICCTestRankings
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் இலங்கை இரண்டு டெஸ்டிலும் வெற்றிபெற்று தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது.

    இதனால் 2-வது இடத்தில் இருந்து தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்திற்கு சரிந்தது. 3-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து 2-வது இடத்திற்கு முன்னேறியது. டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து முதன்முறையாக 2-வது இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.


    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என இழந்ததால், இங்கிலாந்து அணி ஐசிசி தரவரிசையில் 5-வது இடத்திற்கு இறங்கியுள்ளது. #ICCTestRankings
    இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வியடைந்த இங்கிலாந்து, கடைசி டெஸ்டில் ஆறுதல் வெற்றி பெற்றது. அதேவேளையில் ஆஸ்திரேலியா இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்டிலும் வெற்றி பெற்றது.

    படுதோல்வியால் இங்கிலாந்து 5-வது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்தியா தொடர்ந்து முதல் இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 2-வது இடத்திலும் உள்ளது. நியூசிலாந்து 3-வது இடத்தையும், ஆஸ்திரேலியா 4-வது இடத்தையும் பிடித்துள்ளது.
    ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ரிஷப் பந்த் அசுர முன்னேற்றம் அடைந்துள்ளார். புஜாரா 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முந்தினார். #ICC
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருபவர் ரிஷப் பந்த். 21 வயதே ஆகும் இவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் சிறப்பாக விளையாடி முதல் சதத்தை பதிவு செய்தார். அதன்பின் இந்தியாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் இரண்டு முறை 92 ரன்கள் அடித்தார்.

    தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 7 இன்னிங்சில் 350 ரன்கள் குவித்தார். சிட்னியில் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் விளாசினார். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ரிஷப் பந்த் தலா இரண்டு சதம், அரைசதங்களுடன் 696 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 49.71 ஆகும்.

    ஆஸ்திரேலியா தொடரில் 350 ரன்கள் குவித்ததன் மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 21 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முன்னிலை வகித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். இதற்குமுன் டோனி 19-வது இடத்தை பிடித்ததுதான் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவரின் சிறப்பான தரவரிசையாக இருந்தது.

    அத்துடன் 673 புள்ளிகள் பெற்று ரிஷப் பந்த் முதல் இடத்தில் உள்ளார். இதற்கு முன் டோனி 662 புள்ளிகளும், பரூக் இன்ஜினீயர் 619 புள்ளிகளும் பெற்றிருந்தனர்.

    ஆஸ்திரேலியா தொடர் தொடங்குதவற்கு முன் 59-வது இடத்தில் இருந்தார். 20 கேட்ச்கள் பிடித்ததுடன், 350 ரன்களும் குவித்ததன் மூலம் 17-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    மூன்று சதங்களுடன் 521 ரன்கள் குவித்த புஜாரா 4-வது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
    ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் பெருமையுடன் 2018-ம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர் விராட் கோலி, ரபாடா #ICCTestRankings #ViratKohli #Rabada
    டெஸ்ட் கிரிக்கெட் இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கிலும், தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர் ரபாடா பந்து வீச்சிலும் அசத்தி வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

    இந்த ஆண்டின் கடைசி டெஸ்டில் விராட் கோலி ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும், ரபாடா பாகிஸ்தானுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் நம்பர் ஒன் பெருமையுடன் 2018-ம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

    விராட் கோலி 937 புள்ளிகளுடன் முதல் இடத்தில் கடந்த 135 நாட்களாக இருந்து வருகிறார். ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் முதல் இடத்தை இழந்த ரபாடா மீண்டும் முதல் இடத்தை பிடித்தார். செஞ்சூரியனில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்த வருடத்தில் 52 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    ×